Home »

News18 Tamil Videos

» tamil-nadu

குமரியில் மழை குறைந்ததால் வெள்ளம் வடிய தொடங்கியது

கன்னியாகுமரி16:37 PM October 18, 2021

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர் மழையால் பேச்சிப்பாறை. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அஞ்சாலிகடவு, வைக்கலூர்,பரக்காணி பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இந்தநிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை குறைய தொடங்கியதால், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் மெல்ல மெல்ல வடிகிறது. இருப்பினும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆங்காங்கே சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories