ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணிகளுக்கும் இருக்கும் நட்சத்திர பட்டாளம்போல், குறிப்பிட்ட சில அணிகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பேன்ஸ் உள்ளனர். பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் வரிசையில், சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவியா மாறனுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின்போதே, சன்ரைசரஸ் அணிக்காக கலந்து கொண்ட காவியா மாறனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த தொடரில் சென்னையில் நடைபெற்ற கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டியை நேரில் கண்டுகளித்தார்
சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான அவர், வீரர்கள் அடிக்கும் பவுண்டரிக்கும், சிக்சர்களுக்கும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை விளையாடி கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கு என்றாலும் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காவ்யா மாறன் இருந்தார்.
பேரிஸ்டோவ் சிறப்பாக விளையாடியபோது, மகிழ்ச்சியில் இருந்த காவியாவுக்கு போட்டிக்கு இணையாக அவரையும் கேமராக்கள் ஃபோகஸ் செய்தன
ஹைதராபாத் அணி என்பதால் இதற்கு முன்பு ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளின்போது இவரை அடிக்கடி பார்க்கலாம்.
முதல் போட்டி த்ரில்லர் முடிவை நோக்கி சென்றதால், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த காவியாவும் பரபரப்பாக காணப்பட்டார்.
ஹைதராபாத் அணியின் உரிமையாளராக மட்டுமல்லாது சன்டிவி குழுமத்திலும் முக்கிய பொறுப்பில் காவியா மாறன் இருந்து வருகிறார்.
கலாநிதி மாறனும் ஒரு சில போட்டிகளை மகளுடன் அமர்ந்து நேரில் கண்டுகளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஹைதராபாத் அணியை பொறுத்தவரை வார்னர், பேரிஸ்டோவ், வில்லியம்சன் என பேட்டிங் பட்டாளமும், தமிழக வீரரான யார்க்கர் மன்னன் நடராஜன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் உள்ளது.
. இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வி.வி.எஸ் லக்ஷ்மணன், ஹைதராபாத் அணிக்கான ஆலோசனைக் குழுவில் உள்ளார். சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் இருக்கிறார்
சன்ரைசர்ஸ் அணி அடுத்தப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை புதன்கிழமை எதிர்கொள்கிறது.