குழந்தைக்கு ஊட்டச்சத்தான உணவாகக் கொடுக்க இந்த காய்கறிகளில் தினம் ஒன்று சேர்த்துக்கொள்ளுங்கள்..!
நொறுக்கு தீனிகளும், பீட்சா, சாக்லெட், பர்கர் என்று குழந்தைகளை சுற்றி சுற்றி வரும் உணவுகளுக்கு மத்தியில் காய்கறிகளை திணிப்பது என்பது சற்று கடினமான ஒன்று தான்.
Web Desk | January 14, 2021, 8:56 PM IST
1/ 8
குழந்தைகள் பெரும்பாலும் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். அதேசமயம் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி உணவுகளை தேர்ந்தெடுப்பார்கள். உணவை பொறுத்தவரை சுவை என்பது அவர்களுக்கு முதன்மையான ஒன்றாக அமைகிறது. அதனால் ஆரோக்கியமான காய்கறிகளும் பழங்களும் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிட மறுக்கின்றனர். நொறுக்கு தீனிகளும், பீட்சா, சாக்லெட், பர்கர் என்று குழந்தைகளை சுற்றி சுற்றி வரும் உணவுகளுக்கு மத்தியில் காய்கறிகளை திணிப்பது என்பது சற்று கடினமான ஒன்று தான்.
2/ 8
அப்படியானால் சத்தான காய்கறிகளை குழந்தைகள் விரும்பும் ருசியான உணவுகளில் சேர்த்து தருவதே சிறந்த யோசனையாக இருக்கும். இதனால், அவர்கள் சுவையில் சமரசம் செய்யாமல் நல்ல ஆரோக்கியத்தை சேமிக்க முடியும். உங்கள் குழந்தையின் உணவில் அதிக காய்கறிகளைச் சேர்க்க சில எளிய வழிகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பகிர்ந்துள்ளது. அவற்றை குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.
3/ 8
1. இட்லி : மென்மையான, பஞ்சுபோன்ற இட்லி ஒரு சுவையான காலை உணவாகவோ அல்லது குழந்தைகளுக்கு எந்த நேரத்திலும் ஒரு சிற்றுண்டியாகவும் இருக்கும். எனவே இட்லி சமைக்கும் போது சிறிதாக நறுக்கிய காய்கறிகள் அல்லது காய்கறிகளின் ப்யூரியை சேர்ப்பதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த இட்லியை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது கேரட், பீட்ரூட் போன்றவற்றை நன்கு அரைத்து அந்த கலவையை மாவில் செரத்து இட்லியாக அவித்து கொடுக்கலாம்.
4/ 8
2. பட்டர் : பெரும்பாலான குழந்தைகள் கீரை, பிரக்கோலி போன்றவற்றை வெறுப்பதற்கு காரணம் குழந்தைகளின் நாவின் சுவை மொட்டுகள் அதன் கசப்பு தன்மைக்கு மிகவும் சென்ஸ்டிவ் ஆக இருக்கும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளனர். எனவே குழந்தைகள் இந்த மாதிரியான கசப்பு உணவை தவிர்க்கிறார்கள். இந்த உணவுகளுக்கு பட்டர் சிறந்தது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 1 டேபிள் ஸ்பூன் பட்டருடன் அவித்த உருளைக்கிழங்கு, பச்சை பீன்ஸ், ப்ரக்கோலி, கீரைகள் இவற்றை சேர்க்கும் போது அதன் கசப்பு சுவை மாறி குழந்தைகளுக்கு சுவையான உணவாக மாறுகிறது. மேலும் காய்கறிகளில் உள்ள விட்டமின் ஏ, ஈ மற்றும் டி3 போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை குழந்தைகளின் உடல் உறிஞ்சி கொள்ளவும் பட்டர் உதவுகிறது. நல்ல கொழுப்பு மற்றும் உடல் எடை பராமரிப்பையும் சேர்ந்தே தருகிறது.
5/ 8
3. பாவ் பாஜி : பாவ் பாஜி அடிப்படையில் ஒரு வட மாநில உணவு வகையாகும். காய்கறி நிறைந்த கிரேவியுடன் பன் வைத்து சாப்பிடும் ஒரு உணவு இது. பெரும்பாலும் இது அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். இந்த பாஜியில் தக்காளி, வெங்காயம் உருளைக்கிழங்கு போன்றவை அரைத்து சேர்க்கப்பட்டிருக்கும். இதனை வீட்டிலேயே செய்யலாம் காட்டாயம் குழந்தைகளுக்கும் பிடிக்கும். மேலும் இதனுடன் கேரட், பீன்ஸ், சுரைக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்ந்து அதனை பரிமாறலாம்.
6/ 8
4. வெஜிடபிள் நூடுல்ஸ் : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் நூடுல்ஸ். அதனை ஏன் பெற்றோர்கள் சத்து நிறைந்ததாக மாற்றக்கூடாது. வழக்கமாக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் செய்யும்போது கேரட், பீன்ஸ், பட்டாணி, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து சமைக்கலாம். கட்டாயம் குழந்தைகள் நூடுல்ஸில் உள்ள காய்கறிகளை சாப்பிடுவார்கள்.
7/ 8
5. பருப்பு : உங்கள் குழந்தைகள் உணவில் பருப்பு வகைகளை சேர்க்கலாம். ஏனெனில் பருப்பு புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும் இதனை அரிசி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பு என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பருப்பு வகையை சமைத்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறலாம். சப்பாத்திக்கு தால் வகை ரெசிபிக்களை சைடிஷாக கொடுக்கலாம். பருப்பு போலி, பருப்பு உருண்டை குழம்பு, பருப்புகள் நிறைந்த அடை தோசை ரெசிபிக்கள் உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான உணவாக இருக்கும் என்பதால் இதனை அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம்.
8/ 8
குறிப்பாக, குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டலாம். அந்த சமயத்தில் குழந்தைகள் காய்கறிகளையும் சாப்பிடுவார்கள். எப்போதும் பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.