வீட்டின் உட்புறத்தை செடிகளால் அலங்கரிக்க ஐடியாஸ் : இதனால் வீட்டின் உள்ளே தூய காற்றை பெறலாம்..!
சில அழகியல் வேலைப்பாடுகள் மனச்சோர்வை போக்கி, நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என பல்வேறு மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இந்த செடி வளர்ப்பு உங்களுக்கு கை கொடுக்கும்.
Web Desk | April 23, 2021, 7:47 PM IST
1/ 8
கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இன்றளவும் பலர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் மனதும் சோர்வாக இருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆபிஸ் செட்டப் இருந்தால் அல்லது வழக்கமான வீட்டு செட்டப்பில் இருந்து மாறி, புதிய இடத்தில் இருந்து வேலை செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவர்களுக்கு சிம்பிளாக சில ஐடியாக்கள் இருக்கின்றன.
2/ 8
வீட்டில் ஆங்காங்கே சில அழகுசாதன பொருட்களை இடம்பெறச் செய்தால் ஒரே இடத்தில் அமரந்து வேலை செய்வதால் ஏற்படும் மனச் சோர்வையும், களைப்பையும்போக்கலாம். புதிய பொருட்கள் மனதுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்த வல்லது. அந்தவகையில் புதிய கைவிஞைப் பொருட்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமான செடிகளைக் கொண்ட ஜாடிகளை வேலை செய்யும் இடத்தில் வைக்கலாம். அவை உங்கள் மனதுக்குள் புதுவிதமான மன மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். நாள்தோறும் ஒரே இடத்தில் வேலை செய்த உங்களுக்கு, இந்த மாற்றத்தை செய்த பிறகு புதியதொரு இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதுபோன்ற பீலிங் ஏற்படும். இந்த மாற்றம் உங்கள் வேலையிலும் எதிரொலிக்கும்.
3/ 8
சில அழகியல் வேலைப்பாடுகள் மனச்சோர்வை போக்கி, நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என பல்வேறு மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்டு, அதற்காக பணம் இல்லை என்ற கவலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், சின்ன பானையில் ஒரு செடிவைத்து அதனை வேலை செய்யும் இடத்தில் வைத்தால்கூட போதும். நல்ல ஓவியம் தெரிந்தவர் என்றால், அழகிய ஓவியத்தை அந்த பானை மீது வரைந்து அதற்கேற்றார்போல் செடியை வைத்து அழகுறச்செய்யுங்கள். அதே நேரத்தில் வீட்டில் வைக்கும் பானை மற்றும் செடியை வைப்பதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. அதனை தெரிந்துகொள்வது அவசியம்.
4/ 8
பானை மற்றும் செடி : உங்கள் வீட்டில் சிறு மாற்றங்களை, அதாவது அழகு வேலைப்பாடுகளை செய்யத் திட்டமிட்டு பானை மற்றும் செடியை வைக்க விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அவற்றை எங்கு வைக்கிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். வீட்டின் உற்புறத்தில் வைக்க திட்டமிட்டால், பானையின் அழகு வேலைப்பாடுகள், அவை வைக்கும் இடத்தில் இருக்கும் சுவரின் கலர் மற்றும் டெக்கரேஷனை கவனிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பானைக்குள் இருக்கும் செடி மற்றும் அவற்றின் அளவை தேர்தெடுக்க வேண்டும். ஒரு தீம் - ஐ மனதில் நினைத்து அந்த தீம்-க்கு ஏற்ற வேலைப்பாடுகள் கொண்ட பானை மற்றும் செடியை தேர்தெடுக்க வேண்டும்.
5/ 8
செடியின் அமைப்பு : வீட்டின் உற்புறத்துக்கு தேவையான செடி என்பது உங்களின் தேவையைப் பொறுத்தது. விருந்தினர்களை வரவேற்க வைக்கப்படும் செடி, அதனை ஹாலில் வைக்க வேண்டும். செடிகளை பார்த்து தியானம் செய்வதற்காக செடி என்றால், நீங்கள் அன்றாடம் தியானம் செய்யும் பகுதியில் அந்த செடி இருப்பதற்கு தேவையான அமைப்பை உருவாக்க வேண்டும்.
6/ 8
மிகவும் பிடித்த செடி, அதன் வாசனையை எப்போதும் சுவாசிக்க வேண்டும் அல்லது காலையில் விழிக்கும்போது பார்க்க வேண்டும் என நினைப்பவர் என்றால் உங்கள் டேபிளுக்கு பக்கத்தில் அல்லது படுக்கைக்கு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஜாடி அல்லது பானைகளில் செடிகளை வைத்து வீட்டின் அனைத்து பகுதிகளையும் அழகுறச் செய்யலாம். செடிகளை வைப்பதற்கு என்று எந்த நிபந்தனைகளும் இல்லை. உங்களுக்கு தேவையான அனைத்து இடங்களிலும் செடிகளை வைக்கலாம்.
7/ 8
உட்புறம் மற்றும் வெளிப்புற செடிகள் : செடிகள் என்றால் வெளிப்புறத்தில் வளரும். வீட்டிற்குள் வளர்க்கும் செடி, வீட்டிற்கு வெளிப்புறத்தில் வளர்க்கும் செடி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. போதுமான தண்ணீர், சூரிய ஒளி, வளருவதற்கு தேவையான இடம் ஆகியவை இருந்தால் செடிகளுக்கு போதும். அடிப்படை தேவைகள் கிடைக்கும்பட்சத்தில் அவற்றுக்கு உட்புறம் வெளிப்புறம் என்ற பாகுபாடு தெரியாது. ஆனால், அந்த செடிகள் இருக்கும் இடம் உங்களுக்குள் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும்.
8/ 8
செடிகள் வளரும்போது, மலரும்போது, பூக்கள் பூக்கும்போது உங்களுக்குள் அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தும், புதுமையான உணர்ச்சிகள் உங்களுக்குள் வெளிப்படும். அழுக்கு எண்ணங்கள் விலகி, நல்ல சிந்தனைகள், நினைவுகளும் பூக்கள் பூக்கும் காலங்களில் உங்களை வட்டமடிக்கும். வேலையில் சோர்வு, பணக் கஷ்டம், குடும்ப பிரச்சனை என எதுவாக இருந்தாலும், பிரச்சனைகளின் பாதையில் இருந்து விலக்கி, உங்களை அமைதியான தீர்வு பாதையில் பயணிக்க வைக்க இயற்கைக்கு ஆற்றல் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.