கொரோனா வைரஸால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் அலை பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் பணிகளுக்கிடையே உங்கள் உணவையும் கவனித்துக்கொள்வது அவசியம். எனவே, கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பது குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
நீரேற்றமாக இருங்கள் : பொதுவாகவே கோடை காலத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் போது போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது நீங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவுகிறது, மேலும் இது கடுமையான பக்க விளைவுகளை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.
மது அருந்த வேண்டாம் : காய்ச்சல், சோர்வு முதல் உடல் வலி வரை, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி எடுத்து கொண்ட பின்னர் பக்கவிளைவுகள் வராமல் இருக்க முதலில் நீங்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும். இது போன்ற ஒரு நேரத்தில், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியமாகும். எனவே, நீங்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது நீரிழப்புக்கு வழிவகுத்து பக்க விளைவுகளை தீவிரப்படுத்தக்கூடும். ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆல்கஹால் உட்கொள்வதும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
முழு தானிய உணவுகளை உட்கொள்ளுங்கள் : பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தொற்றுநோய்கள் பரவும் நேரத்தில் ஆரோக்கியமான உடலை உறுதிப்படுத்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிக முக்கியம். அதனால்தான், நீங்கள் COVID தடுப்பூசி முதல் ஷாட் எடுக்க முடிவு செய்தால், நிறைவுற்ற கொழுப்பு அதிகம் அதிக அளவு கலோரிகளைக் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை விட எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான முழு தானிய உணவுகளை உட்கொள்ளுங்கள். பருப்பு வகைகள், சூப் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச்சத்து மிக்க உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள் : நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஒரு ஆரோக்கியமான உடலுக்கும், நல்ல நோயெதிர்ப்பு அமைப்புக்கும் முக்கியம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். COVID-19 தடுப்பூசி எடுத்து கொள்ளும் போது போது, நன்கு நிதானமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம், இது ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் சாப்பிட்டிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும், மேலும் தூக்கத்தை அதிகமாக்குகிறது என்பதால் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
சீரான உணவை உட்கொள்ளுங்கள் : கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு முன்னும் பின்னும் சரியான உணவு சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். கொரோனா தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளாக மயக்கம் மற்றும் பலவீனம் இருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இவற்றைக் குறைக்கலாம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, நீரேற்றமாக இருப்பது மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது பதட்டத்துடன் தொடர்புடைய மயக்கத்தை தவிர்க்க உதவுகிறது.




