உங்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கா..? இதில் தினம் ஒன்று உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..!
முடி உதிர்தல் / வழுக்கை தலை, மலச்சிக்கல், எடை அதிகரிப்பு / எடை இழப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், சோர்வு, மந்தநிலை போன்றவை தைராய்டு நோயில் முக்கிய அறிகுறிகள்
Web Desk | April 23, 2021, 4:22 PM IST
1/ 11
தற்போது பெரும்பாலானோர் தைராய்டு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. தைராய்டு பிரச்சினைகள் பெரும்பாலான பெண்களால் எதிர்கொள்ளப்படுகின்றன மற்றும் வயதுக்கு ஏற்ப பிரச்சினை அதிகரிக்கும். தைராய்டு ஹார்மோன்கள் உங்கள் உடலின் ஆற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் இயல்பான வளர்ச்சிக்கு காரணமாகின்றன. உங்கள் தைராய்டு ஹார்மோன் உங்கள் உடல் எடையுடன் தொடர்புடையது.
2/ 11
முடி உதிர்தல் / வழுக்கை தலை, மலச்சிக்கல், எடை அதிகரிப்பு / எடை இழப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், சோர்வு, மந்தநிலை போன்றவை தைராய்டு நோயில் முக்கிய அறிகுறிகள் என்று பெங்களூரு அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் உணவியல் நிபுணர் டாக்டர் சரண்யா சீனிவாஸ் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
3/ 11
தைராய்டு என்றால் என்ன? : நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான முதன்மை நாளமில்லா சுரப்பி இது. இதன் எடை 12-லிருந்து 20 கிராம்வரை இருக்கும். சாதாரணமாகப் பார்க்கும்போது நம் கண்ணுக்கு இது தெரியாது.
4/ 11
நாம் உணவை விழுங்கும்போது, முன் கழுத்தில் குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது என்றால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று அர்த்தம். தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்' (T4), ‘டிரைஅயடோதைரோனின்' (T3) எனும் இரண்டு வித ஹார்மோன்களைச் சுரக்கிறது. இது அதிகமாக சுரக்கும் போது தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.
5/ 11
உங்கள் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு பட்டியலை சரி செய்தால் தைராய்டு பிரச்சனையை விரைவில் குணமாக்கலாம்., தைராய்டு அளவை குறைக்க உதவும் உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
6/ 11
குங்குமப்பூ: தைராய்டு பிரச்சினைகள் உள்ள பெரும்பாலான மக்களில் மனநிலையை மாற்றுவதற்கு குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இது வயிற்றுப் பிடிப்புகள் அல்லது பி.எம்.எஸ் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் தைராய்டு அசாதாரணங்களைக் கொண்ட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உதவுகிறது. உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதத்தையும் நீங்கள் பெற ஒரு கிளாஸ் குங்குமப்பூ பால் அருந்தினால் போதுமானது.
7/ 11
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழை மரத்தின் இல்லை, காய், தண்டு, பூ என அனைத்தும் சத்துக்கள் நிறைந்திருப்பதால் நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. ஆகையால், ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சினைகளைத் தடுக்கிறது, ஏனெனில் இது இயற்கையாகவே அயோடின் மூலமாகும். இதேபோல மா, பலா சீசன்களில் ஒரு சில துண்டுகள் மட்டும் சாப்பிடுவது நல்லது.
8/ 11
கொள்ளு : குதிரை கிராம் எனப்படும் கொள்ளு தென்னிந்தியாவிலும் சத்தீஸ்கர் மற்றும் பீகார் போன்ற ஒரு சில மாநிலங்களிலும் பயிரிடப்படும் மிக முக்கியமான பயிர். இது பெரும்பாலும் பருப்பு வடிவத்தில் உண்ணப்படுகிறது, இதில் புரதம், இரும்பு, துத்தநாகம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படும். எனவே, வாரத்திற்கு இரண்டு முறையாவது ரசம் / பருப்பு / சூப் செய்து சாப்பிடலாம்.
9/ 11
கடல் உணவுகள் : கடல் உணவுகள் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மீன், நண்டு, இறால் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். செலினியம், ஒமேகா -3 சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆரோக்கியமான தைராய்டுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களுடன் சிறந்த அமினோ அமிலத்தையும் அளிக்கிறது.
10/ 11
கிச்சடி அல்லது பொங்கல்: சமீபத்திய ஆய்வுகள் படி உங்கள் தைராய்டு எவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதை உங்கள் குடல் ஆரோக்கியம் தீர்மானிக்கிறது. குடல் பாக்டீரியாவின் எந்த ஏற்றத்தாழ்வும் (டிஸ்பயோசிஸ் என அழைக்கப்படுகிறது) மலச்சிக்கல் / வீக்கம் அல்லது இரைப்பை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை சீர்குலைக்கிறது. ஆகையால், உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு கிசச்டி / பொங்கலை வாரத்திற்கு இரண்டு முறையாவது சேர்த்துக் கொள்ளுங்கள், காய்கறிகள், மிளகு, கொத்தமல்லி, கருவேப்பிலை, நெய் என இதில் சேர்க்கும் பொருட்கள் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதனால் உங்களுக்கு தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்யும்.
11/ 11
முழு தானியங்கள்: முழு தானியங்களில் வைட்டமின்களுடன் அயோடின், காப்பர், மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன, இது நாள் முழுவதும் நீங்கள் ஆற்றலுடன் வேலை செய்ய உதவுகிறது. எனவே பாரம்பரியமாக சமைத்த சாம்பார் / ரசம் / பருப்பு சட்னி போன்றவற்றை அரிசி அல்லது முழு கோதுமை உணவுகளுடன் சாப்பிடும்போது அதில் இருந்து புரதம், ஃபைபர்-செலினியம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் சிறந்த கலவையை வழங்குகிறது. எனவே இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வருவது உங்களை தைராய்டு நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.