அனைவரும் அழகாக, பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு முகத்தில் பெரிய துளைகள் அதாவது ஓபன் போர்ஸ் காணப்படும். மூக்கு அல்லது கன்னம் பகுதியை சுற்றியுள்ள இந்த துளைகளை சரி செய்வது சற்று கடினம். சில நேரங்களில் இவை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும், குறிப்பாக நீங்கள் மேக்அப் செய்யும் போது எரிச்சலை உணர்வீர்கள், ஏனெனில் பெரும்பாலான க்ரீம்கள், லோஷன்கள் தயாரிப்புகள் இந்த துளைகளில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நீங்கள் ஃபேஸ் பேக்குகள் தயாரித்து பயன்படுத்தலாம்.
கடலை மாவு ஃபேஸ் பேக் : கடலை மாவில் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது முகப்பரு, தோல் அழற்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும். இறந்த சரும செல்களை அகற்றுவதற்கும், சரும துளைகளை சரி செய்வதற்கும் கடலை மாவு சிறந்தது. ஒரு பவுலில் 2 டீஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் தேன் அரை ஸ்பூன் எடுத்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்\
முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் : ஃபுல்லர்ஸ் எர்த் என்று பிரபலமாக அழைக்கப்படும் முல்தானி மிட்டி இயற்கையான சுத்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது, அவை சருமத்தில் உள்ள அழுக்களை நீக்க உதவுகிறது, மேலும் உங்கள் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெய் பசையை ஈர்த்து சருமத்தை பொலிவாக்குகிறது. இதற்கு 2 ஸ்பூன் முல்தானி மிட்டி, 1 டீஸ்பூன் தக்காளி சாறு, சிறிது மஞ்சள் தூள் எடுத்து நன்கு தண்ணீரில் கலந்து அப்ளை செய்ய வேண்டும். உலர்ந்தவுடன் தண்ணீரில் கழுவி விட்டு ரோஸ் வாட்டரைத் தொடர்ந்து மாய்ஸ்சரைசராக பயன்படுத்துங்கள். அடிக்கடி இப்படி செய்து வந்தால் ஓபன் போர்ஸ் சரியாகிவிடும்.
முட்டை ஃபேஸ் பேக் : முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளை கரு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களை அகற்றுவற்கு உதவுகிறது. இதனால் உங்கள் சருமம் புதிதாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சரும துளைகளை சுருக்கி, உங்கள் முகத்தை பொலிவாக்குகிறது. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் முகத்தில் நேரடியாக தடவி வறண்டு போகும் வரை விட்டுவிடுங்கள். பின்னர் நீங்கள் உரித்தாலே வந்துவிடும், அல்லது நீரில் கழுவலாம். இந்த முறையை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேன் ஃபேஸ் பேக் : தேன் ஒரு சிறந்த வைட்டமின் சி ஆதாரமாகும். தேனை எலுமிச்சை பழத்துடன் கலக்கும்போது சருமம் அழகாகும். தேன் உங்கள் சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்கும், மேலும் இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்தாமல் உங்கள் சரும துளைகளை குறைக்க உதவும். ஒரு பவுலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன், சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்கு பேஸ்ட் செய்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் சரும துளைகள் சரியாகும்.




