இனி கெமிக்கல் டை வேண்டாம்..இயற்கையான முறையில் வீட்டிலேயே நரை முடிக்கு டை அடிக்கலாம்..!
Web Desk | April 23, 2021, 2:57 PM IST
1/ 10
இன்றைய காலகட்டத்தில் தலையில் நரை தோன்றுவது என்பது வயதானவர்களுக்கு மட்டும் வரும் பிரச்சனையாக இல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூட ஏற்படும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் வாழ்க்கை மற்றும் உணவுமுறை மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கிறது.
2/ 10
நரைமுடி என்றாலே தீர்வு ஹேர் டை என்ற முடிவெடுக்கும் பலரும் சந்தைகளில் விற்கப்படும் ரசாயனங்கள் நிறைந்த ஹேர்டைகளை வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இது சரும அரிப்பு, எரிச்சல், தடிப்பு, புற்றுநோய் உட்பட ஏராளமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். தொற்று தீவிரமாக பரவிவரும் இந்த நிலையில் சலூனுக்கு சென்று தலைமுடிக்கு டை அடித்து கொள்வதும் இப்போது கடினமாக இருக்கிறது. எனவே பக்கவிளைவுகள் ஏதுமின்றி இயற்கை முறையில் வீட்டிலேயே எளிமையாக தயாரிக்க கூடிய அதே சமயம் தலைமுடிக்கும் கருமை தர கூடிய சில வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
3/ 10
நெல்லிகாய்: உடல், சருமம், கூந்தல் உள்ளிட்டவற்றிற்கு அதிக ஆரோக்கியம் தரும் சூப்பர் ஃபுட் நெல்லிக்காய். முடி உதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டது.தேவையான அளவு நெல்லிக்காயை எடுத்து அதிலிருக்கும் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்து நெல்லி பொடி தயார் செய்து கொள்ள வேண்டும். டை அடித்து கொள்வதற்கு முதல் நாள் இரும்பு கடாய் ஒன்றில் தேவையான அளவு நெல்லிப்பொடி மற்றும் தேங்காய் எண்ணெயை காலத்து வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை இந்த கலவையை கொண்டு முடிக்கு டை அடிப்பது உங்கள் முடிக்கு அதிசயங்களை செய்யும்.
4/ 10
காஃபி: இதற்கு கண்டிப்பாக காஃபி ஆர்கானிக்காக இருக்க வேண்டும். ஆர்கானிக் காஃபி தூளை பயன்படுத்தி நல்ல ஸ்ட்ராங்கான பிளாக் காஃபி (Black cofee) காய்ச்சி தயார் செய்து பின்னர் அதை ஆற விடுங்கள். பின் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எந்த வகை ஹேர் கண்டிஷனரிலும், இந்த ஆற வைத்த காஃபியை நன்றாக கலக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் தலைமுடியை அலசி விடுங்கள்.
5/ 10
கெமோமில் டீ: கெமோமில் என்பது ஒரு மூலிகை. இது டெய்சி மலர்களை போல இருக்கும். இந்த மூலிகை இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் அரை கப் கெமோமில் பூக்களை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். `பின் ஒரு மணி நேரம் ஆற வைக்கவும். உங்கள் தலைமுடியை ஈரப்படுத்தி, காய்ச்சிய கெமோமில் தேநீரை உங்கள் ஈரமான கூந்தல் வழியே சுமார் 10 முறை ஊற்றி சிறிது நேரம் காய வைத்து பின் நன்றாக அலசி கொள்ளவும்.
6/ 10
பிளாக் டீ: பிளாக் டீயில் டானிக் அமிலம் (tannic acid) நிறைந்துள்ளது. இதை தலைமுடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் காலப்போக்கில் உங்கள் முடியை கருமையாக்கும். மிகவும் ஸ்ட்ராங்கான பிளாக் டீ (5 தேக்கரண்டி / 5 டீபாக்ஸைப் பயன்படுத்தி) சில கப் காய்ச்சி கொள்ளுங்கள். பின் அது ஆறும் வரை காத்திருந்து உங்கள் தலைமுடியில் ஊற்றி 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின் வெதுவெதுப்பான நீரில் முடியை கழுவுங்கள்.
7/ 10
இலவங்கப்பட்டை: இந்த ஹேர் டையை தயாரிக்க அரை கப் வறுத்த இலவங்கப்பட்டை தூளை, அரை கப் கண்டிஷனர் அல்லது காய்கறி எண்ணெய் என்றும் அழைக்கப்படும் கேரியர் எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் ஈரமான கூந்தலில் தடவி, கலவையை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலையை அலசவும்.
8/ 10
பீட்ரூட் & கேரட்: நீங்கள் அழகிய மற்றும் சிவப்பு நிற ஷேடுடான் கூடிய கூந்தல் நிறத்தை பெற விரும்பினால் அதற்கு பீட்ரூட் & கேரட் சிறந்த தேர்வு. பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் என இரண்டிலும் ஒவ்வொரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். இரு ஜூஸ்களையும் கலந்து ஸ்பேரே பாட்டில் ஒன்றில் சேமிக்கவும். இதை உங்கள் தலைமுடி முழுவதும் ஸ்பிரே செய்து சுமார் 3 மணி நேரம் முடியை கவர் செய்து வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
9/ 10
கேரட் ஜூஸ்: தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் கேரட் ஜூஸை கலந்து உங்கள் தலைமுடியில் தடவவும். உங்கள் தலைமுடியைக் கட்டி, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கழுவ வேண்டும்.
10/ 10
மருதாணி : தலைமுடிக்கு நிறம் தர பயன்படுத்தப்படும் பழமையான முறை என்றாலும் இது இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. அரை கப் ஹென்னாவை எடுத்து கொண்டு அதை 1/4 கப் தண்ணீரில் கலக்கவும். இரவு முழுவது இந்த கலவையை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மறுநாள் காலை பயன்படுத்துங்கள். சாதாரண தண்ணீரில் தலையை அலசுங்கள்.