முகமெல்லாம் முகப்பருவா? இயற்கை வழியில் போக்க சூப்பரான டிப்ஸ்
இந்த பருக்கள் முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தி பார்ப்பதற்கு அசிங்கமாகவும் இருக்கும். எனவே உடனடியாக இந்த டிப்ஸுகளை ஃபாலோ பண்ணுங்க...
Web Desk | January 12, 2021, 5:43 PM IST
1/ 6
பதின்பருவ இளைஞர்கள் பொதுவாக தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களுக்கு முகப்பரு பெரும் பிரச்சனையாக இருக்கும். இதற்காக கண்ணாடி முன் பல மணி நேரம் செலவழித்து, முகப்பருக்களை நீக்க என்ன செய்யலாம் என யோசிப்பார்கள்.இந்த பருக்கள் முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்தி பார்ப்பதற்கு அசிங்கமாகவும் இருக்கும். இதனை இயற்கை வழியில் உங்கள் வீட்டிலேயே நீக்குவதற்கு 5 சூப்பரான ரெமிடீஸ் (Remedies) உள்ளன.
2/ 6
1. வேம்பு : வேம்பு அல்லது இந்தியன் லிலாக் (Indian Lilac) பழங்காலத்தில் இருந்து முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க ஒரு பாரம்பரிய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தோலில் சேரும் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்டவை மயிர்க்கால்களை நிரம்புவதால், பிளாக்ஹெட்ஸ், வைட்ஹெட்ஸ் மற்றும் முகப்பருக்கள் உண்டாகின்றன. இவை முகம், தோல்பட்டை, மார்பு, முதுகு உள்ளிட்ட உடம்பின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகின்றன. வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுறைகளில் இருக்கும் இந்த தொற்று கிருமிகளை அழிக்கின்றன. இதன்மூலம் முகத்தில் தோன்றும் பருக்கள் அழிந்து, முகம்பொலிவாக இருக்கும்.
3/ 6
2. சந்தனம் மற்றும் கற்பூரம் : வேம்பைப்போலவே சந்தனமும் தோல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது முகப்பருக்களுக்கு எதிராக போராடும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதேபோல், வெள்ளை கற்பூர எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளன. இது சருமத்தில் இருக்கும் கொப்பளங்களை குறைக்க உதவுகிறது. சந்தனம் மற்றும் கற்பூரத்தால் செய்யப்பட்ட மூலிகை கலவை பெரும்பாலும் முகப்பருவுக்கும், முகத்தை பொலிவு பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
4/ 6
4. நீராவி சிகிச்சை : நீராவி சிகிச்சை உடலில் வியர்வை தூண்டுவதுடன், இறந்த சரும செல்கள், பாக்டீரியா மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. இது முகப்பரு, பிளாக்ஹெட்ஸ் மற்றும் பிற தோல் கறைகளின் தோற்றத்தை குறைக்கிறது. கூடுதலாக, இது சருமத்தின் மேற்பரப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் நீராவி சிகிச்சை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், முடி நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உங்கள் தலைமுடிக்கு பயனளிக்க கூடியது.
5/ 6
5. ஐஸ் கட்டி சிகிச்சை : ஐஸ் கட்டிகளைக்கொண்டும் முகப்பருக்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். முகப்பருக்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க ஐஸ் கட்டிகள் பயன்படுகின்றன. பெரிய முகப்பருக்களைச் சுற்றி தோல்களில் ஏற்படும் சிவப்பு புண்கள் முகத்தோற்றத்துக்கு மிகவும் அசிங்கமாக இருக்கும். அத்தகைய புண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஐஸ் கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முகப்பருக்களால் ஏற்படும் சோர்வை நீக்கவும், முகதோற்றத்தை பிரெஷ்ஷாக வைத்திருப்பதற்கும் ஐஸ் கட்டிகள் பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தேய்த்தால், சீரான ரத்த ஓட்டம் முகத்துக்குக் கிடைக்கும். இதனால் முகம் சிவப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
6/ 6
6. கற்றாழை : கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை முகப்பருக்களை நீக்க பயன்படுகிறது. மேலும் இதில் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள என்சைம் தோலுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதோடு, பாக்டீரியா, ஃபங்கஸ், அழுக்கு போன்றவற்றை நீக்கி தோலை சுத்தமாக்குகிறது. தோலின் நச்சு, முகத்தில் தோன்றும் வெள்ளைத் தன்மை போன்றவற்றையும் நீக்கும். தோல் வறட்டுத்தன்மையை அடையும்போது சருமத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளும். முகப்பருவால் தோன்றும் வீக்கத்தையும் குறைக்கும்.