கல்வான் பகுதியில் சீன படைகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட உள்ளன.
2/ 3
லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீன படைகள் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
3/ 3
அவர்களின் நினைவை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் 20 பேரின் பெயர்களும் பொறிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.