

சீன செயலிகள் மீதான இந்திய அரசின் தடை குறித்து மக்களின் மன நிலையை அறிய நியூஸ் 18 கருத்துக்கணிப்பு நடத்திய நிலையில், அதன் முடிவுகளை பார்க்கலாம்.


59 சீன செயலிகள் மீதான இந்திய அரசின் தடைக்கு நீங்கள் ஆதரவா என்ற கேள்விக்கு 89.3% பேர் ஆம் என்றும், 7.9% பேர் இல்லை என்றும் 2.7% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்


சீன செயலிகள் உங்களது தகவல்களை திருடுகிறதா என்ற கேள்விக்கு 77.5% பேர் ஆம் என்றும், 8.5% பேர் இல்லை என்றும் 13.8% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்


மற்ற சீன செயலிகளுக்கும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 86.8% பேர் ஆம் என்றும், 8.6% பேர் இல்லை என்றும் 4.5% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்


சீன நிறுவனங்களில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு 80.2% பேர் ஆம் என்றும், 11.3% பேர் இல்லை என்றும் 8.4% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்


இந்தியாவின் விதிமுறைகளுக்கு உள்பட்டால் தடையை நீக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 31.4% பேர் ஆம் என்றும், 57.1% பேர் இல்லை என்றும் 11.4% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்


ஒருவேளை தடை நீக்கப்பட்டால் சீன செயலிகளை பயன்படுத்துவீர்களா? என்ற கேள்விக்கு 14.5% பேர் ஆம் என்றும், 76.7% பேர் இல்லை என்றும் 8.8% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்