கிழக்கு லடாக் பகுதியில் சீன படையினர் உடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரு தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகம் முன்பாக உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பாஜகவினர் சீனக் கொடிய கிழித்து, அந்நாட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் மேலும் சீன தயாரிப்பு போனை உடைத்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்