Master FDFS : 'மூடிக்கிடந்த தியேட்டர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது மகிழ்ச்சி' - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடி வரவேற்றனர்.
Web Desk | January 13, 2021, 10:52 AM IST
1/ 13
விஜயின் 64வது திரைப்படமான மாஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.
2/ 13
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தற்போது பொங்கல் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.
3/ 13
50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதால் தமிழக அரசு காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
4/ 13
அதனடிப்படையில் காலை 4 மணிக்கே மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சி சென்னையில் தொடங்கியது.
5/ 13
இரவு முதலே திரையரங்க வாயிலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் காலை 4 மணிக்கு முதல் காட்சியை பார்த்தனர். திரையரங்க வாயிலில் விளக்குகளை எரிய ஒட்டும் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்கிரீனில் விஜய் படத்தின் பாடல்களை போட வேண்டும் அதற்கு நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
6/ 13
முதல் நாள் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அட்லி நடிகர் அர்ஜுன் தாஸ் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.
7/ 13
படம் முடிந்த பின்னர் ரசிகர்களின் புடைசூழ வெளியே வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
8/ 13
பல மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகள் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
9/ 13
பெரிய திரை அரங்கில் மீண்டும் படங்களை பார்ப்பது உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர்கள் கூறினர். திரைப்படமும் நன்றாக இருப்பதால் படம் வெற்றியடையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
10/ 13
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
11/ 13
இதன்காரணமாக வழக்கத்தை விட குறைவான ரசிகர்களே திரையரங்கில் காணப்பட்டார்கள். ஆனாலும் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
12/ 13
சேலம் மாவட்டத்தில் 80 திரையரங்குகளில் மாஸ்டர் வெளியாகியுள்ளது. கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் இரண்டாவது காட்சியை பார்க்க ஏராளமானோர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்
13/ 13
சேலம் மாவட்டத்தில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி, சில திரையரங்குகளில் 4:00 மணிக்கும், சில திரையரங்குகளில் 5:00 மணிக்கும் திரையிடப்பட்டது.