எளிமையான முறையில் திருமணம்.. இணை இயக்குநரை மணந்தார் நடிகை கயல் ஆனந்தி!
நடிகை கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கொரோனா காரணமாக யாருக்கும் அழைப்பு விடுக்காமல் நெருங்கியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தது எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
Yuvaraj V | January 17, 2021, 7:57 PM IST
1/ 9
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான 'கயல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அதனால் இவரது பெயர் கயல் ஆனந்தி என்று மாறியது. ஆனால் உண்மையான பெயர் ரக்ஷிதா.
2/ 9
தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வெற்றிமாறன் தயாரித்த பொறியாளன், பிரபு சாலமனின் கயல் ஆகிய படங்களின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
3/ 9
அந்தப் படத்தைத் தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
4/ 9
மாரி செல்வராஜ் இயத்தில் 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது.
5/ 9
தற்போது அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்செல், ராவண கோட்டம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வரும் ஆனந்திக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
6/ 9
இந்நிலையில் நேற்றைய தினம் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்தது , சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.
7/ 9
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் திரைத்துறை நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
8/ 9
சாக்ரடீஸ் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ராவணக் கூட்டம், கமலி ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
9/ 9
இந்த திருமணத்தில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.