Home » News » Trend » VIRAL VIDEO BENGALURU MAN FLUNG INTO AIR BY HANGING WIRE CRASHES INTO WOMAN SKV

பறந்து வந்து விழுந்த ஆட்டோ டிரைவர் - 52 தையலுடன் உயிர் தப்பிய பெண்மணி (வீடியோ)

வியப்பை ஏற்படுத்தும் வகையில் அதிர்ச்சிகரமான விபத்து பெங்களூரில் நடந்துள்ளது

பறந்து வந்து விழுந்த ஆட்டோ டிரைவர் - 52 தையலுடன் உயிர் தப்பிய பெண்மணி (வீடியோ)
பறந்து வந்து விழுந்த ஆட்டோ டிரைவர்
  • Share this:
பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் சாலையின் குறுக்கே ஒரு ஒயர் ஒன்று கிடந்துள்ளது. இதனை அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த நபரின் வாகனத்தில் சிக்கி டயரில் இழுத்துக்கொண்டே சென்றுள்ளது.

அப்போது சாலையில் ஒரு ஆட்டோ டிரைவர் ஓரமாக நின்று கொண்டிருக்க ஒயர் ஆட்டோ டிரைவரின் காலுக்கடியில் சென்று அவரை இழுத்து வழுக்கி சென்று வானில் பறப்பது போல் தூக்கி வீசியுள்ளது.

அவர் விழுந்த இடத்தில் சுனிதா எனும் பெண்மணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.  பெண்ணின் மீது ஆட்டோ டிரைவர் விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுனிதாவிற்கு 52 தையல்கள் போடப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பார்ப்பதற்கு ஆட்டோ டிரைவர் தீடீரென வானில் பறந்து வந்து விழுவது போல் உள்ள காட்சி அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading