சிவில் சர்வீஸ் தேர்வில் 420-வது இடம் பிடித்த ராகுல் மோடி..!

நாட்டின் மிகப் பெரிய அரசியில் தலைவர்களான மோடி மற்றும் ராகுல் பெயரை கொண்ட ராகுல் மோடி என்பவர் 420-வது இடத்தை பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் 420-வது இடம் பிடித்த ராகுல் மோடி..!
UPSC
  • Share this:
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களைவிட, 420ஆவது இடம் பிடித்த ராகுல் மோடி பெயர்தான் பேசுபொருளாகியுள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. பிரதீப் சிங் என்பவர்  முதலிடம் பெற்றுள்ளார்.

இதில் வினோதமான ஒரு சம்பவமும் நடந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசியில் தலைவர்களான மோடி மற்றும் ராகுல் பெயரை கொண்ட ராகுல் மோடி என்பவர் 420-வது இடத்தை பெற்றுள்ளார்.


இவரின் பெயர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேசிய அரசியலில் ராகுல்காந்தியும், நரேந்திர மோடியும் எதிரெதிர் திசையில் களம் கண்டுவருகிறார்கள். இவர்களின் பெயர்களை கொண்ட நபர் சிவில் சர்வீசஸ் தேர்வில் 420 ஆவது இடம் பிடித்திருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.



சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading