திடீர் தடையால் சோக கீதம் வாசிக்கும் டிக்டாக் பிரபலங்கள் - வீடியோ

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதில் இயங்கி வந்த ஏராளமானவர்கள இரவு முதல் சோக கீதம் இசைத்து வருகின்றனர்.

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதில் இயங்கி வந்த ஏராளமானவர்கள இரவு முதல் சோக கீதம் இசைத்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Share this:
சீனாவின் 59 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு திங்கட்கிழமை இரவு தடை விதித்தது. அதில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் டிக் டாக், ஹலோ உள்ளிட்டவையும் அடங்கும். மற்ற செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் அதில் பணியாற்றிய ஊழியர்கள் பணி பறிபோகும், உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது. ஆனால் அது தொடர்பாக பெரிய அளவில் பேசப்படாத நிலையில், டிக் டாக் தடைவிதிக்கப்பட்டதுதான், அதன் பயனாளர்களின் தூக்கத்தை கலைத்துள்ளது.

நவீன கூத்துபட்டறையாக திகழ்ந்த டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால் இந்தியாவில் 14 மொழிகளில் டிக் டாக்கில் இயங்கும் அத்தனை ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்ட அதே இரவு 8 மணி வாக்கில்தான், டிக் டாக்கிற்கு தடை என்ற செய்தியும் வந்தது. அப்போதுகூட, அதிர்ச்சியடையாத பல டிக் டாக் பயன்பாட்டாளர்கள், திங்கட்கிழமை விடிய விடிய தூக்கத்தை இழந்து டிக் டாக்கில் சோக கீதம் இசைக்கத் தொடங்கிவிட்டனர்.

திடீர் ஊரடங்கு அறிவித்தபோது, கடைகள் மூடுவதற்குள் அவசர அவசரமாக பொருட்களை மக்கள் வாங்கிக் குவிக்க கடைகளில் குவிந்ததுபோல், தங்கள் ரசிகர்களை தக்க வைக்க அவசர அவசரமாக தங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் தொடங்கி தங்களுக்கு மற்ற செயலிகளில் உள்ள கணக்குகள் குறித்து விளம்பரப் படுத்தத் தொடங்கினர்.

சிலர் எவ்வளவு அடித்தாலும் தாங்குறாண்டா என்ற வடிவேலுவின் காமெடி போல, டிக் டாக் போனா என்ன என, அழுகையை மறைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டது வேறு ரகம்.

டிக் டாக் செயலி ஊடக வெளிச்சம் பட முடியாத பல திறமைசாளிகளை வெளிஉலகத்திற்கு காட்டியதில் பெரும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும் ஊடக வெளிச்சம் உள்ள நடிகர், நடிகைகளே டிக் டாக்கை தங்களின் பெயர், புகழ் பெறுவதற்கான தளமாக பயன்படுத்தும் அளவிற்கு அது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது.

 

டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை மூலம், அதன் பயன்பாட்டாளர்களும், பார்வையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் அதற்கு மாற்றாக வரும உள்நாட்டு செயலிகளை ஆரம்ப நிலையிலேயே, டிக் டாக்கில் குறைகள் எனக் கூறப்பட்ட விசயத்தை கலைந்து, அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக, அறுவெறுப்பு இல்லாததாக வர வழிவகை செய்தால், அதன் செயல்பாடு ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 
First published: