ரூ.16 லட்சம் செலவு செய்து பப்ஜி விளையாடிய 17 வயது சிறுவன் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்

ரூ.16 லட்சம் செலவு செய்து பப்ஜி விளையாடிய 17 வயது சிறுவன் - அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்
கோப்புப்படம்
  • Share this:
பஞ்சாபைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாடுவதற்கு அப்பா, அம்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்.

ஸ்மார்ட்போன்களில் இளைஞர்களால் விளையாடப்படும் மிக முக்கியமான விளையாட்டு பப்ஜி எனப்படும் விளையாட்டு. துப்பாக்கிச் சுடும் வகையைச் சேர்ந்த இந்த விளையாட்டுக்கு இந்திய அளவில் ஏராளமான இளைஞர்கள் அடிமையாகவே உள்ளனர். இந்தநிலையில், பஞ்சாபைச் சேர்ந்த 17 வயது இந்த விளையாட்டு அடிமையாக இருந்துள்ளார்.

அவர், இந்த விளையாட்டை விளையாடுவதற்கு அவனுடைய அப்பா, அம்மாவின் வங்கிக் கணக்கிலிருந்து 16 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளான். ஆப் வாங்குவதற்கு விளையாடும்போது ஆப்பை அப்கிரேட் செய்வதற்கு பணத்தை செலவழித்துள்ளான். அவனுடன் இணைந்து பப்ஜி விளையாடியவர்களுக்கும் ஆப்பை அப்கிரேட் செய்ய பணத்தை செலவழித்துள்ளான். அவனுடைய அப்பா, அம்மா தெரிந்துவிடாமல் இருப்பதற்காக, வங்கியிலிருந்து மொபைல்போனுக்கு வந்த பணம் செலவானது தொடர்பான குறுஞ்செய்திகளை அழித்துள்ளான். அவனுடைய அப்பா, ஒரு அரசு ஊழியர். இதுகுறித்து பணத்தை இழந்த அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.



அவருடய பதிவில், ‘என்னுடைய மகனின் படிப்பு செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் வைத்திருந்த பணத்தை பப்ஜி விளையாடி தொலைத்துவிட்டான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கூட அளிக்க முடியாத சூழல் உள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading