7 மணிநேரமாக இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் தங்கியிருந்த பாம்பு.. (வீடியோ)

மிர்சாபூரில் தூங்கி கொண்டிருந்த இளைஞரின் ஜீன்ஸ் பேண்ட்டுக்குள் பாம்பு நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 மணிநேரமாக இளைஞர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டில் தங்கியிருந்த பாம்பு.. (வீடியோ)
வீடியோ காட்சி
  • Share this:
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தின் சிந்தகர்பூர் கிராமத்தில் மின்சார வாரிய அதிகாரிகள் மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். இந்த வேலைகளை செய்ய வந்த தொழிலாளர்களை அந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் தங்கவைத்தனர்.

அங்கன்வாடி பள்ளியில் பணியை முடித்த தொழிலாளர்கள் அசந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது லவ்லேஷ் என்ற தொழிலாளியின் பேண்ட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. தன்னுடைய பேண்ட்டிற்குள் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்த தொழிலாளி நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார்.

Also Read : அமெரிக்க நண்பருடன் ஓரினச்சேர்க்கை.. முதலிரவை விரும்பாத புதுமாப்பிள்ளை மீது வழக்கு..


லவ்லேஷ் தனது பேண்ட்டிற்குள் பாம்பு இருப்பதைப் பார்த்து சகதொழிலாளிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அசைந்தால் பாம்பு கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்த கம்பத்தை பிடித்தவாறு அசையாமல் நின்று உள்ளார். உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பாம்பு பிடிக்கும் நபர் வரவைக்கப்பட்டார்.

பாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கிழித்து கொஞ்ச கொஞ்சமாக பாம்பை வெளியே கொண்ட வர போராடினார். 8 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. அதுவரை அந்த இளைஞர் கம்பத்தை பிடித்தவாறே எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தார்.இதனிடையே இளைஞரின் பேண்ட்டில் பாம்பு புகுந்த சம்பவம் கேள்விப்பட்டு கிராம மக்கள் அங்கு ஒன்று திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading