'என் இனமடா நீ' காண்டாமிருகத்தை கட்டியணைக்கும் குட்டி யானை - இணையத்தை கலக்கும் வீடியோ

காட்டில் குட்டி யானை ஒன்று காண்டாமிருகத்தை கட்டியணைக்கும் வீடியோ ஒன்றை இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'என் இனமடா நீ'  காண்டாமிருகத்தை கட்டியணைக்கும் குட்டி யானை - இணையத்தை கலக்கும் வீடியோ
காண்டாமிருகத்தை கட்டியணைக்கும் யானை
  • Share this:
வனத்தில் குட்டியானைகள் செய்யும் குறும்பிற்கு அளவே இல்லை. சறுக்கி விளையாடுவது, தண்ணீரில் லூட்டி, சேற்றில் விளையாட்டு, தும்பிக்கையை வைத்து குறும்பு செய்தல் என ஏதாவது செய்து கவனம் ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

அவ்விதம் தற்போது காட்டில் யானை செய்த குறும்பு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 

அதில் யானை குட்டி ஒன்று தனது தும்பிக்கையை வைத்து காண்டா மிருகத்தை "என் இனமடா நீ" எனும் வசனத்திற்கு ஏற்ப கட்டி அணைக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading