வீடியோக்களுக்கு பணம் கொடுக்கும் சிங்காரி செயலி - டிக்டாக்கின் இடத்தை நிரப்புமா?

டிக்டாக் | சிங்காரி

TIkTok Ban | இந்தியாவின் மிக அதிக பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனால், மாற்று செயலிகளை நோக்கி நகர்ந்து வருகிறாரகள் அதன் பயனாளர்கள்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலகம் முழுவதும் 155 நாடுகளில் 150 கோடிக்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் செயலியை இந்தியாவில் மட்டும் பதிவிறக்கம் செய்தவர்கள் ஏறத்தாழ 50 கோடி பேர். டிக்டாக் பயனாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பயனாளர்கள் இந்தியர்கள்.

  'மியூசிக்கலி' எனும் பெயரில் இந்தியாவில் பிரபலமாகி இருந்த செயலி 2018ம் ஆண்டு டிக்டாக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் பலகோடி பயனாளர்களைப் பெற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது டிக்டாக்.

  இந்நிலையில், பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு டிக்டாக்கிற்கு தடை விதித்திருக்கிறது இந்திய அரசு.

  காலை எழுந்தது முதலே டிக்டாக்கிலேயே பல்துலக்கி, குளித்து, உண்டு, உறங்கி என அதனையே தங்களின் ஒரு அங்கமாக மாற்றி வந்தவர்கள் இப்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

  யாருக்கும் தெரியாமல், வெளிக்காட்ட வழி தெரியாமல் இருந்த பல சாமானியர்களின் திறமைகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது டிக்டாக் செயலியின் சாதனை பக்கம்.. அதேசமயம், ஆபாச வீடியோக்கள், தேவையற்ற சர்ச்சைகள், டிக்டாக் ஸ்டார்களுக்கிடையேயான பஞ்சாயத்து, லைக் கிடைக்கவில்லை என தற்கொலைக்கு முயன்றவர்கள் என இன்னொரு மோசமான பக்கமும் டிக்டாக்குக்கு ஒன்று.
  படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
  டிக்டாக்குக்கு தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக இரு செயலிகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஒன்று மித்ரோன் எனும் இந்திய நிறுவன செயலி.

  கடந்த சில மாதம் முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, ஆரம்பகாலத்தில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மித்ரோன் செயலி, பாகிஸ்தானின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்பட… சர்ச்சை வெடித்ததால், தற்காலிகமாக நீக்கப்பட்ட தற்போது மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பிடித்துள்ளது.

  அச்சு அசலாக டிக்டாக் போன்றே காட்சியளிக்கும் இந்த ஆப், ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் பாதுகாப்பு அம்சங்கள் அவ்வளவு நம்பிக்கை அளிக்கவில்லை.

  டிக்டாக்குக்கு அடுத்த மாற்று என முன்வைக்கப்படுவது இந்தியத் தயாரிப்பான சிங்காரி செயலி. டிக்டாக் செயலியைப் போன்றே குறும் வீடியோ பகிர்வு தளம் தான் சிங்காரியில், ஆங்கிலம், இந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வீடியோவை பார்வையிடலாம்.

  அதோடு, பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை பெறும் பார்வையாளர்களைப் பொறுத்து பணத்தை ஈட்டும் வசதியையும் தருகிறது சிங்காரி செயலி.

  இவ்விரு செயலிகளும் தோற்றத்தில் டிக்டாக்கை அப்படியே பிரதிபலித்தாலும், பயன்பாட்டில் டிக்டாக் போன்று அப்படியே இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். ஆனால், போக போக இவற்றில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்
  Published by:Sankar
  First published: