ரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடு - தற்போது வரை ₹ 1.17 லட்சம் கோடி திரட்டல்
பேஸ்புக், சில்வர் லேக்,. விஸ்டா இக்யூட்டி, ஜெனரல் அட்லாண்டிக், முபடாலா உள்ளிட்ட நிறுவனங்கள் வரிசையில் 12-வதாக இன்டெல் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ
- News18
- Last Updated: July 3, 2020, 3:41 PM IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் இன்டெல் கேபிட்டல் நிறுவனம் 1894 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்டெல் கேபிட்டல் நிறுவனம் ஜியோவின் 0.39 விழுக்காடு பங்குகளை கைப்பற்றியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில், பேஸ்புக், சில்வர் லேக்,. விஸ்டா இக்யூட்டி, ஜெனரல் அட்லாண்டிக், முபடாலா உள்ளிட்ட நிறுவனங்கள் வரிசையில் 12-வதாக இன்டெல் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி இதுவரை 25.05 விழுக்காடு பங்குகளை விற்றதன் மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 588 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

தேதி | முதலீட்டாளர் | முதலீடு ( ₹ கோடியில் ) | பங்கு |
ஏப்ரல் 22 | பேஸ்புக் | 43,574 | 9.99% |
மே 3 | சில்வர் லேக் | 5,656 | 1.15% |
மே 8 | விஸ்டா | 11,367 | 2.32% |
மே 17 | ஜெனரல் அட்லாண்டிக் | 6,598 | 1.34% |
மே 22 | கே.கே.ஆர் | 11,367 | 2.32% |
ஜுன் 5 | முபடாலா | 9,093 | 1.85% |
ஜூன் 5 | சில்வர் லேக் | 4,547 | 0.93% |
ஜூன் 7 | அடியா | 5,683 | 1.16% |
ஜூன் 13 | டிபிஜி | 4,546 | 0.93% |
ஜூன் 13 | எல் கேட்டர்டென் | 1,894 | 0.39% |
ஜூன் 18 | பிஐஎப் | 11,367 | 2.32% |
ஜூலை 3 | இன்டெல் கேபிடல் | 1,894 | 0.39 |
மொத்தம்: | ₹ 1,17,588 கோடி | 25.09% |