கொரோனாவை எதிர் கொள்ள உதவும் யோகாவும் அக்குபங்க்சரும்: பலன்களைத் தெரிந்துகொள்வோம்

கொரோனா யோகா

  • Share this:
அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை பின்தொடர்ந்தால் போதும். இதற்கு நம்முடைய நேரத்தில் சில நிமிடங்களை யோகாவிற்கு செலவு செய்ய வேண்டும்.

கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் சுவாச பிரச்சினைக்கு, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் உள்ள இயற்கை மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு யோகா சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். இதே போல சூரிய குளியல், அரோமா தெரபி, முகத்திற்கு நீராவி, சுடுதண்ணியில் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது, அக்குபங்க்சர் சிகிச்சைகள் ஆகியவை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமாகி இல்லம் திரும்புகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு யோகா பயிற்சி கூடுதல் உதவியாக இருக்கிறது. யோகா என்பது மனம் உடல் இரண்டையும் சீராக சமநிலைப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகிறது.

கொரோனாவுக்கு யோகா


கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தங்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் குறித்த மன அழுத்தம் உண்டாகிறது. இந்த மன அழுத்தம், நுரையீரல் செயல்பாட்டை பாதித்து, சளி, இருமல், தும்மல் போன்ற அறிகுறிகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து தொற்று தாக்கத்திற்கு உள்ளாகின்றன. எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் சுவாச நிலை சீரடையவும் யோகாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சுவாச நிலை சரியாகி, மன அழுத்தம் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து  கொரோனாவில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் இருப்பவர்கள், வயதானவர்களுக்கு யோகா மூலம் தைரியத்தை கொடுப்பதால அவர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள். இதே போல ஒவ்வொரு நோயாளிக்கும் மன உறுதியை கொடுத்து வருகிறோம் என்கிறார் யோகா மருத்துவர் தீபா.

யோகா இயல்பான இயற்கையான எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. வயதானவர்கள் வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு யோகா மூச்சுப்பயிற்சி வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். மூச்சு பயிற்சி என்றால் வேகமாகவோ உடலின் ஆற்றல் சக்தியை குறைக்கும் அளவுக்கு செய்வேண்டும் என்று இல்லை. அவருடைய உடல் நிலையைப் பொறுத்து அவருடைய மூச்சில் கவனம் செலுத்தி கற்று கொடுத்தால் போதும். யோகாவில் மூச்சை உள்ளே இழுக்கும் போது வயிறு பகுதி நெஞ்சுப்பகுதி எந்த அளவுக்கு அசைகிறது  என்பதை கவனிக்க சொல்கிறோம்.

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு முத்ரா, வாயு முத்ரா, இருதய முத்ரா என மூன்று வகைகளை சொல்லி கொடுக்கிறோம் என்று கூறிய மருத்துவர் அதனை எப்படி செய்ய வேண்டும் என்று நோயாளிகளுக்கு தினமும் விளக்குகிறார்.

இந்த மூன்று யோகாவும் உடலில் நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும், இதயத்திற்கு அதிகமான ரத்த ஓட்டத்தை கொண்டுபோய் இரத்த கொதிப்பை சீர் செய்வதற்கும், ரத்த அழுத்தம் ஆகியவற்றை குணப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குணப்படுத்த உதவுகிறது.

கொரோனாவும் அக்குபங்க்சரும்

இதே போல் அக்குபங்க்சர் சிகிச்சை முறையும் கொரோனா நோயாளிகளிக்கு கை கொடுக்கிறது. அக்குபங்க்சர் மூலமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாச பிரச்சினையில் இருந்து மீண்டு வெளி வர உதவுகிறது. இது மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையையும் அக்குபங்க்சர் சரிசெய்துவிடுகிறது. இடது கையில் உள்ள ஆள்காட்டி விரல்களில் உள்ள கோடுகளின் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அக்குபங்க்சர் முறை


இதனால் நுரையீரல் 100 சதவீதம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு நுரையீரலால் ஏற்படும் பிரச்சினைகள் குறைந்து, கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்கிறார் மருத்துவர் தீபா.

விரைவில் அனைவரும் கொரோனாவில் இருந்தும் ஊரடங்கினால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட வீட்டில் இருந்தபடியே தங்களுடைய ஆரோக்கியத்தை பாதுகாத்திட யோகாசனங்கள் அன்றாடம் செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
Published by:Karthick S
First published: