புகார் அளித்த பெண்ணுக்கு நள்ளிரவில் போன் கால் - போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு

திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வே.பாலகிருஷ்ணன் அண்மையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய பணி விடுப்பு உத்தரவை பிறப்பித்தார்

புகார் அளித்த பெண்ணுக்கு நள்ளிரவில் போன் கால் - போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு
காவலர் மணிவண்ணன்
  • Share this:
காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவில் போன் செய்து விசாரித்ததால் காவல் ஆய்வாளருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மணிவண்ணன். சில ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2018-ம் ஆண்டில் இருந்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது. புகார் அளித்த பெண்ணை இரவில் போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிவண்ணனுக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த வே.பாலகிருஷ்ணன் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய டி.ஐ.ஜியாக ஆனி விஜயா பொறுப்பேற்றுள்ளார்.

படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

படிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..


அதற்கான கடிதம் இரு தினங்களுக்கு முன் மணிவண்ணனிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கட்டாய ஓய்வில் விடுவிக்கப்பட்டார்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading