உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா - உறுதி செய்த தனியார் மருத்துவமனை

அமைச்சர் கே.பி. அன்பழகன்

 • Share this:
  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து, மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. அந்தவகையில் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிப்பட்டுவருகின்றனர். இதுவரையில் நான்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தற்போது, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை அறிவித்துள்ளது. அவருக்கு நேற்று இருமல் அதிகரித்தன் காரணமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்தியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  Published by:Karthick S
  First published: