இ- பாஸ் விவகாரம் - உதயநிதி செயல் 420: சட்டம் தன் கடமையை செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

ஜெயக்குமார்

  • Share this:
இ- பாஸ் இல்லாமல் சாத்தான் குளம் சென்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செயல் 420 ஆகும். இவ்விவாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை யானைக்கவுனி அருகே உள்ள அண்ணா பிள்ளை தெருவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். அங்குள்ள பொதுமக்களுக்கு  முகக்கவசம், கபசுர குடிநீர் ஆகிவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மைக்ரோ அளவில் பல நடவடிக்கைகளில் சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது. அடர்த்தியான குடிசைப்பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்னையில் எதிர்ப்பார்த்த முடிவுகள் விரைவில் கிடைக்கும்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வைத்து தான் தூத்துகுடி சென்றார் என்றால், அதை ஏன் ட்விட்டரில் வெளியிடவில்லை? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதயநிதிக்கு இசைவே கொடுக்கவில்லை. அவர் செய்தது 420 வேலை. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை  செய்யும் என்றார்.

உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனோ தொற்று உறுதியென மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது குறித்த கேள்விக்கு, முதலில் அவருக்கு தொற்று இல்லை என்பதால் அமைச்சரும், முதலமைச்சரும் இல்லையென்றனர். தற்போது உறுதியாகிவுள்ளது என பதிலளித்தார்.

சாத்தான் குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு, நீதிமன்றம் மூலம் விசாரணை நடைபெறுகிறது, இந்த நிலையில் கருத்து சொல்ல முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: