தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 35,426 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 12,49,317 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்திலுள்ள 4,180 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 100 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,214 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 60,592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



செங்கல்பட்டில் 215 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 134 பேருக்கும், மதுரையில் 352 பேருக்கும், ராமநாதபுரத்தில் 149 பேருக்கும், ராணிப்பேட்டையில் 104 பேருக்கும், திருவள்ளூரில் 251 பேருக்கும், திருவண்ணாமலையில் 173 பேருக்கும், விருதுநகரில் 100 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading