கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொண்டாடப்படுமா? அச்சத்தில் கைவினை கலைஞர்கள்

கொரோனா அச்சுறுத்தலால் இம்மாதம் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்திருக்கும் தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொண்டாடப்படுமா? அச்சத்தில் கைவினை கலைஞர்கள்
விநாயகர் சிலை
  • Share this:
கண்ணை பறிக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலைகளெல்லம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக தஞ்சையில் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 2 அடி முதல் 10 அடி வரை 40 வகைகளில் விற்பனைக்கு தயார் நிலையில் விநாயகர் சிலைகள் உள்ளன.

ஆனால் வாங்குவதற்குதான் ஆள் இல்லை எனக் கூறுகிறார்கள் கடவுள் சிலைகளை படைக்கும் கை வினைஞர்கள். 10 லட்சம் வரை வங்கியில் கடனாகவும், வட்டிக்கும் பணம் வாங்கியும் சிலைகளை செய்துள்ள நிலையில், இதுவரை ஒரு சிலையை கூட வாங்க யாரும் முன்வரவில்லை எனக் கூறுகின்றனர்.

இம்மாதம் முழுவதும் ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் போட்ட முதல் மட்டுமல்லாது மொத்த உழைப்பும் வீணாகிவிடுமோ என்று கைவினைஞர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதே போன்று நெல்லையிலும் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெறுகிறது. விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள ராகுல், கைவினை கலைஞர் . இவர் இளைஞர் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவருடன் அம்மாநிலத்தில் இருந்து 3 குடும்பங்கள் நெல்லை வந்து விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

18 ஆண்டுகளாக நெல்லைக்கு வந்து விநாயகர் சிலை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக இவர்கள் கூறுகின்றனர். வழக்கமாக ஆயிரத்து 500 சிலைகள் தயார் செய்யும் தாங்கள், இந்த ஆண்டு 150 சிலைகள் மட்டும் செய்துள்ள போதும் ஒரு சிலை கூட விற்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் ஊருக்கு கூட திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் இந்த ராஜஸ்தான் கைவினை கலைஞர்கள் கூறுகின்றனர்.மேலும் படிக்க...நாகை ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா - அச்சத்தில் அதிகாரிகள்

கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. கொரோனா கொல்லை நோய் இவர்களுக்கு வழி விடுமா? அரசு அனுமதி கிடைக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading