மிரட்டும் கொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 3,943 பேர் பாதிப்பு: 60 பேர் உயிரிழப்பு

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

 • Share this:
  தமிழகத்தில் ஒரேநாளில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு 90,167 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 30,053 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 11,70,683 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 90,167 ஆக அதிகரித்துள்ளது.

  இன்று மட்டும் 2,345 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்தமாக 50,074 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம், மொத்த உயிரிழப்பு 1,201 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  செங்கல்பட்டில் 160 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், மதுரையில் 257 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: