தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கையில் தொடரும் தாமதம்: குழப்பத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறித்த தெளிவு இல்லாததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவச் சேர்க்கையில் தொடரும் தாமதம்: குழப்பத்தில் மாணவர்கள்
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் இரண்டு முறை தள்ளிப்போன நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் அக்டோபர் 12ம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில் , மறு தேர்வு 14ம் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் பின் இறுதியாக 16ம் தேதி இரவு தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் குளறுபடிகளுக்கு இடையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் தற்போது வரை மாநில அளவிலான தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீட் தேர்வு ? வெளியாகும் போதே, அகில இந்திய தரவரிசையில் இடம் என்ன, மாநில தரவரிசைப் பட்டியலில் எந்த இடம்? ஒவ்வொருவர் சமூகப் பிரிவுக்குள் என்ன இடம்? என்ற விவரங்கள் வெளியிடப்படும். ஆனால் தற்போது அவை வெளியாகாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா இல்லையா, எந்த மருத்துவக் கல்லூரியில் என்ன படிப்புக்கு இடம் கிடைக்கும் என தெரியாமல் வேறு படிப்புகளை தேர்வு செய்யலாமா இல்லையா என எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எல்லாம் கணினிமயமாகிவிட்ட நிலையில், மாநிலப் பட்டியலை தயாரிப்பது எளிதான காரியம். 85% இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் இருக்கும் போது, எந்த மதிப்பெண் எந்த தரவரிசையில் வரலாம் என்ற முதல் கட்ட பட்டியலை மட்டுமாவது வெளியிட வேண்டும். சில மாணவர்களுக்கு பொறியியல் இடம் கிடைத்துள்ளது. அவர்கள் எந்த படிப்பை தொடரலாம் என முடிவு எடுக்காமல் மன உளைச்சலில் உள்ளனர் என கல்வியாளர் பாலாஜி சம்பத் கூறுகிறார்.


மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் தகுதிப் பெற்றுள்ளார். 7.5% இட ஒதுக்கீடு உண்டா இல்லையா, அப்படியே இருந்தாலும் தனக்கு அதில் இடம் கிடைக்குமா இல்லையா என குழப்பமாக இருப்பதாக கூறுகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முறையான பயிற்சிகள் கிடைக்காததால் நினைத்த மாதிரியான மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த மதிப்பெண்ணுக்கு இடம் இருக்கா இல்லையா என தெரியாமல் மேலும் மன உளைச்சலாக இருப்பதாக கூறுகிறார்.

மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஆண்டுகளில் குளறுபடிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன. எனவே தரவரிசைப்பட்டியலை வெளியிட தேசிய தேர்வு முகமை தயங்குகிறது.


கிராமப்புற வசதி குறைந்த மாணவர்களுக்கு வெவ்வேறு படிப்புக்கான கலந்தாய்வுக்கு பணம் செலுத்துவதே சிரமமாக இருக்கும். 7.5% இட ஒதுக்கீடு தாமதமானால் இந்த ஆண்டு கிராமப்புறத்தில் உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை குறையும். மருத்துவ படிப்புக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை தொடங்கவுள்ள நிலையில் மாநில சேர்க்கையில் நிலவும் குழப்பத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading