தந்தை, மகன் உயிரிழப்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்தும் கைது செய்யாதது ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

  இந்த விவகாரம் தொடர்பா உயர் நீதிமன்ற மதுரைகிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்துவருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், ’ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது’ என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரையில் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

  இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

     காவல்துறைக்கு தலைமையாக, இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  Published by:Karthick S
  First published: