பெண் வி.ஏ.ஓ - ஊராட்சி தலைவர் இடையே தவறான உறவு என தாக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் பெண் விஏஓவிற்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் தவறான பழக்கம் இருப்பதாகக்கூறி கணவரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெண் வி.ஏ.ஓ - ஊராட்சி தலைவர் இடையே தவறான உறவு என தாக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்
தாக்கப்பட்ட காட்சிகள்
  • News18
  • Last Updated: August 6, 2020, 7:03 AM IST
  • Share this:
சிவகங்கை அருகே சொக்கநாதபுர ஊராட்சி மன்ற தலைராக இருப்பவர் கண்ணன். கடந்த 11-ம் தேதி மாலை சொக்கநாதபுரம் பெண் வி.ஏ.ஓ. மாறுதல் ஆகி செல்வதால் ஊர் பிரமுகர்கள் 3 பேருடன் பிரிவு உபசார விழாவிற்காக மதகுபட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு பஞ்சாயத்து தலைவர் கண்ணன் சென்றுள்ளார்.

அப்போது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டவர்களுடன் வீட்டுக்குச் சென்ற விஏஓவின் கணவர் இருவர் மீதும் தாக்குதலில் ஈடுபட்டார். தனது மனைவி உடன், தவறான பழக்கத்தில், பஞ்சாயத்து தலைவர் இருந்ததாகக்கூறி தாக்குதல் நடத்தியதாக கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் கண்ணனை தாக்கிய தகவல் சொக்கநாதபுரம் கிராம மக்களுக்கு தெரிந்து, அவருக்கு ஆதராவாக போராட்டத்தில் குதித்தனர்.


சொக்கநாதபுரம் - கல்லல் சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்ட தகவல் அறிந்து சென்ற மதகுபட்டி போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை சமாதானப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கிராம பஞ்சாயத்து தலைவர் கண்ணன் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.போராட்டத்தில் பங்கேற்ற பஞ்சாயத்து தலைவர் கண்ணன், வேறு ஊருக்கு மாற்றலாகி செல்லும் விஏஓவை கிராம மக்கள் சார்பில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவே அவரது வீட்டுக்கு சென்றதாக கூறினார்.

கிராமத்தினருடன்தான் அவரது வீட்டுக்கு சென்றதாகவும், தனக்கு கிராமத்தில் உள்ள நல்ல பெயரை கெடுக்கவே இதுபோன்று தாக்குதலில் ஈடுபட்டு அவதூறு பரப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய கணவர் மீது பெண் விஏஓ சிவகங்கை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவருக்கும் தனக்கும் 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளார்.

விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அதனால் ஆத்திரத்திலும், தனது வீட்டை அபகரிக்கவும் இது போன்று தாக்குதலில் ஈடுபட்டு அவதுறு பரப்புவதாக கூறியுள்ளார்.

மனைவியின் குற்றசாட்டு குறித்து தாக்குதலில் ஈடுபட்ட பெண் விஏஓவின் கணவர் மணிகண்டனிடம் விளக்கம் கேட்டபோது, இரவு எட்டரை மணிக்கு என்ன பிரிவு உபசார விழா? என கேள்வி எழுப்பினார். இருவருக்கும் இடையில் தவறான பழக்கம் இருப்பதாகவும், அதனால்தான் தாக்கியதாகவும் கூறி உள்ளார்

அதிகாரிகளின் குடும்பச்சண்டை.. வேலையிடத்து சண்டை இரண்டுக்கு நடுவில், கொரோனா காலத்தில் அப்பகுதி மக்கள் சிக்கித்தவிக்கிறனர். காவல்துறையின் விசாரணையில் சர்ச்சை முடிவுக்கு வருமா?
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading