சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி யாருடைய பொறுப்பு? தானாகவே காட்சிகள் அழியும்படி யார் மாற்றியது? புதிய தகவல்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், நாள்தோறும் அழியும் வகையில் பிப்ரவரி மாதமே செட்டிங்ஸ் மாற்றப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி யாருடைய பொறுப்பு? தானாகவே காட்சிகள் அழியும்படி யார் மாற்றியது? புதிய தகவல்
சாத்தான்குளம் காவல்நிலையம்
  • Share this:
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் விசாரிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், நாள்தோறும் சிசிடிவி காட்சிகள் தானாக அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளதாகாவும், நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அறிக்கை அளித்திருந்தார்.

இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 6 மாதமாகவே தொழில்நுட்பப் பிரிவு பதவிகள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. டிஜிபி அலுவலக உத்தரவுப்படி, குறைந்தபட்சம் 15 நாட்களின் சிசிடிவி காட்சிகளை அழிக்கக் கூடாது என்ற நிலையில், பிப்ரவரி மாதமே சிசிடிவி கேமராவில் செட்டிங்ஸ் மாற்றப்பட்டதை கண்டறியப்பட்டுள்ளது.



இதையடுத்து, சிசிடிவியில் நாள்தோறும் காட்சிகள் அழியும் வகையில் செட்டிங்ஸ் செய்தது யார் என சிபிசிஐடி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காவல்நிலையத்தின் சிசிடிவி யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசாருடன், ஐஜி சங்கர் ஆலோசனை நடத்தினார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading