'அன்று அந்த எஸ்.ஐ.யை மன்னித்ததால் இன்று 2 உயிர்கள் போய்விட்டன..’ 2013-ல் நடந்த ஒரு சம்பவம்

பெனிக்ஸ் | ஜெயராஜ் | எஸ்.ஐ பாலகிருஷ்ணன்

சாத்தான் குளம் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ பாலகிருஷ்ணன் 2013-லும் மனித உரிமை ஆணையம் வரை விசாரணையில் சிக்கியுள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தன்னை தாக்கிய எஸ்.ஐ பாலகிருஷ்ணனை மன்னித்து விட்டதால் அவர் தற்போது சாத்தான்குளத்தில் இருவரின் இறப்புக்கு காரணமாகிவிட்டார் என நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த மணி என்பவர் கூறியுள்ளார்.

  சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தில் தொடர்புடைய எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கடந்த 2013-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் பணியாற்றியுள்ளார்.
  படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
  அப்போது விசாரணையின் போது மணி என்பவருக்கு ரத்தம் வருமாறு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கடுமையாக தாக்கியுள்ளார்.

  இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் மணி புகாரளிக்க,  விசாரணை நடத்தப்பட்டது, இந்த புகாரால் தனது வேலை பரிபோகும் நிலை ஏற்பட்டதை அறிந்த பாலகிருஷ்ணன், வழக்கை திரும்ப பெறுமாறு மணியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து பேசிய மணி, தான் பாலகிருஷ்ணனை மன்னித்து விட்டதால் இன்று 2 உயிர் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
  Published by:Sankar
  First published: