சாத்தான்குளம் சம்பவம் - மிரட்டல் கருத்துக்களால் சஸ்பெண்ட் ஆன 3 காவலர்கள்

Sathankulam Case |

சாத்தான்குளம் சம்பவம் - மிரட்டல் கருத்துக்களால் சஸ்பெண்ட் ஆன 3 காவலர்கள்
சதீஷ் முத்து | ரமணன் | மகாராஜன்
  • News18
  • Last Updated: June 30, 2020, 10:08 AM IST
  • Share this:
சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் காவல்துறை மீது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

இதற்கிடையே, காவலர்கள் சிலரும் சமூக வலைதளத்தில் மிரட்டல் தொனியில் கருத்து பதிவிட, அது வைரலான நிலையில், அவர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து, நாகை டி.எஸ்.பி அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் ரமணன் ஆகிய இருவரும், சமூக வலைதளத்தில் மிரட்டல் விட்டு நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

சதீஷ் முத்துவின் பதிவு


அதேவேளையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த நீதித்துறை மாஜிஸ்திரேட்டுக்கு மிரட்டல் விடுத்ததாக காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

ரமணனின் முகநூல் பதிவு.


காவல்துறையினர் பொதுமக்களை கணிவுடன் அனுக வேண்டும் என்பதே அவர்களுக்கு அளிக்கக் கூடிய அடிப்படை பயிற்சியாகும். ஆனால், அதையே மறந்து இப்படி பொதுவெளியில் மிரட்டுவது, ஒட்டுமொத்த துறைக்கே கெட்ட பெயரை வாங்கித்தரும் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

 
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading