ரூ.12000 வரை சம்பளம் பிடித்தம்.. அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேதனை

போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே வருவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரூ.12000 வரை சம்பளம் பிடித்தம்..  அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேதனை
அரசு போக்குவரத்து ஊழியர்கள்
  • Share this:
கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சம்பளம் என்பது மிக முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசு ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் ஒவ்வொரு மாதமும் அரசு  போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்பட்டு வருகிறது  ஏப்ரல் மாதம் முழுமையாக வழங்கப்பட்ட சம்பளம், மே மாதத்தில் 10 சதவீதமாக குறைந்தது. அதற்கு போக்குவரத்து ஊழியர்கள் காரணம் கேட்டபோது கடந்த ஆண்டின் விடுப்பை கணக்கெடுத்து இந்த ஆண்டு சம்பளம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது ஜூன் மாதம் அதிகபட்சமாக 12 ஆயிரம் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள்  வேதனையுடன் தெரிவிக்கின்றனர் . ஆனால் இதுகுறித்து பே ஸ்லிப் விவரங்களை தர வேண்டும் என ஊழியர்கள் அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சம்பள விவரங்களை ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


இது தொடர்பாக தொமுச பொது செயலாளர்  நடராஜன் கூறுகையில், அரசாணை 304-இன் படி முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கியுள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்கிறார் .
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading