சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக வட்டாட்சியர் நியமனம்
Sathankulam Case | சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் காவல்நிலையத்தை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
- News18
- Last Updated: June 30, 2020, 9:30 AM IST
தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார்.
காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக மூன்று காவலர்கள் மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நேரில் ஆஜராக உள்ளனர்.
படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்
படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?
நீதித்துறை நடுவரை அவதூறாக பேசியது மற்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பாக காவலர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய விசாரணையின் போது, சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தூர் ராஜன் காவல் நிலைய பொறுப்பதிகாரியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால் நியமிக்கப்பட்டுள்ளார்.