93 வயதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் ராக்கம்மாள் பாட்டி - 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்தல்!

93 வயதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் ராக்கம்மாள் பாட்டி. 50கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்துகிறார்.

93 வயதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் ராக்கம்மாள் பாட்டி - 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அசத்தல்!
ராக்கம்மாள் பாட்டி
  • News18
  • Last Updated: August 7, 2020, 2:19 PM IST
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டையில் வசித்து வருப்பவர் ராக்கம்மாள் பாட்டி. அவரின் வயது 93. ஆனால் தற்போதும் உடல் உறுதியுடன் ஜிம்னாஸ்டிக் செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் 50 கிலோ  பளு தூக்கும் கருவியை அசால்ட்டாக கையாளும் காட்சியை அனைவரும் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து ராக்கம்மாள் பாட்டியிடம்  கேட்டபோது, இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதால் தான் தற்போது அதிக எடையை தூக்கினாலும் எளிமையாக இருக்கிறது என கூறினார்.

உடற்பயிற்சி எல்லாம் செய்வது கிடையாது. எப்பொழுதாவது பேரக்குழந்தைகள் உடற்பயிற்சி செய்யும் போது அந்த எடையை தூக்கி பார்க்க ஆசைப்படுவேன். என்னால் தூக்க முடியுமா என்பதை அவர்கள் பார்த்து பயப்படுவார்கள் என்று கூறினார்.


Also read... தொடர்ந்து புதிய உயர்வை தொடும் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

முடக்கத்தான் கீரை, தூதுவளை, பிரண்டை போன்ற உணவுகளை சாப்பிட்டால் நல்ல உறுதியான உடலையும் ஆரோக்கியமான வாழ்நாளையும் நாம் பெறலாம் என்னும் ராக்கம்மா பாட்டி தெரிவித்தார்.மேலும், தன் பேரக் குழந்தைகளுக்கும் இயற்கையான உணவுகளையும் மூலிகை உணவுகளையும் கொடுத்து வளர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading