தமிழகத்தில் கொரோன பிரச்னை முடிவுக்கு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு நேர
ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னர் தெரிவித்தது.
ஆனால், தற்போது ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் எனவும் பயணிகள் சிரமத்திற்கு மன்னித்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட இழப்பை சரி கட்ட முடியாததால் நிறுத்தம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.