பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி நிலுவை உதவித் தொகை வழங்க கோரிய மனு குறித்து 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிலுவையை வழங்க கோரி வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 7:51 PM IST
  • Share this:
தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நிலுவை உதவித்தொகையை வழங்கக் கோரிய மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டு முடியும் நேரத்தில் இத்தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால், நிலுவையிலுள்ள தொகையை உடனடியாக கல்வி நிறுவனங்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத் தலைவர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read: தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்த அரசு பேருந்து நடத்துநர் கைது


இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏராளமான கல்லூரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த ஜூன் மாதமே அரசுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் சங்கம் அளித்த மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading