மக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - மானாமதுரை புதிய டி.எஸ்.பி. ராஜேஷ் 

டி.எஸ்.பி.,ராஜேஷ்- மானாமதுரை

மானாமதுரை சப் டிவிசன்னில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளுக்காக மக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று மானாமதுரையில் தற்போது புதிதாக  பொறுப்பேற்றிருக்கும் டி.எஸ்.பி.,ராஜேஷ் கூறியுள்ளார். 

  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சப்–டிவிஷன் டி.எஸ்.பி.,யாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மானாமதுரை, சிப்காட், திருப்பாசேத்தி, பழையனுார், திருப்புவனம், பூவந்தி ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏதேனும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தாராளமாக என்னுடைய கைப்பேசியில் அழைத்து கூறலாம்.

9498210141 என்ற எண்ணில் 24 மணி நேரமும்  தொடர்பு கொள்ளலாம் என்றார். மேலும் குற்றச்சம்பவங்கள் குறித்து என்னுடன் தொடர்பு கொள்பவர்கள் பற்றி ரகசியமாக பாதுகாக்கப்படுவார்கள் என்றும், மேற்கண்ட ஊர்களில் கஞ்சா மற்றும் மது போதையில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க...

புதுச்சேரியில் ஒரு தலை காதலால் மாணவிக்கு நடந்த கொடூரம்

திருட்டுத்தனமாக கஞ்சா, மது, விற்பனை செய்பவர்கள் மற்றும் மணல் கடத்துபவர்கள்  மீதும் நடவடிக்கை எடுத்து சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published: