சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கார், ஆட்டோ, லாரிகள் இயங்கலாம்: இ-பாஸ் தேவையா?

சென்னை காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என்று காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கார், ஆட்டோ, லாரிகள் இயங்கலாம்: இ-பாஸ் தேவையா?
கோப்பு படம்
  • Share this:
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவுபெறும் நிலையில் நாளை முதல் ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கண்ணன் :
6-ம் தேதி முதல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாடகை கார், ஆட்டோ, லாரி போன்றவை இயங்கலாம் என்றும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்றார்.   முழு ஊரடங்குக்கு முன்பு கடந்த 19-ம் தேதி பின்பற்றிய விதிமுறைகளை ஓட்டுநர்கள் 6-ஆம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டும் என்றும். போலி இ-பாஸ் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


இதே போல் ஊரடங்கால் சென்னையில் செயல்படாமல் இருக்கும் 400 தானியங்கி சிக்னல்கள் திங்கள் முதல் இயங்கும் என தெரிவித்த அவர்,  19-ஆம் தேதி வரை பல்வேறு காரணங்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தேதி அடிப்படையில் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். மாநகர பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவெடுக்கவில்லை.

முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் கட்டுப்பாடுகளை பொது மக்களும், ஓட்டுநர்களும் பின்பற்றி போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading