சாத்தான்குளம் கொலை வழக்கு: சிக்குகிறார்களா தன்னார்வலர் இளைஞர்கள்? விசாரணையில் புதிய திருப்பம்..

மணிக்கு மணி மாற்றங்கள்.. நொடிக்கு நொடி பதற்றம்.. இரண்டு உயிர்கள் பலி.. பாவத்தை சுமந்து நிற்கிறது சாத்தான்குளம் காவல்நிலையம்.. போலீசாரின் சித்திரவதை கொடூரத்தால் தந்தை மகன் மரணமடைந்த விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது.. சிபிசிஐடியின் விசாரணையின் புதிய கோணங்கள் என்ன?

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிக்குகிறார்களா தன்னார்வலர் இளைஞர்கள்? விசாரணையில் புதிய திருப்பம்..
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
தந்தை, மகன் சாத்தான்குளம் போலீசாரின் சித்திரவதைக்கு தன்னார்வ இளைஞர்கள் உதவி செய்தார்களா? சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் காட்சிகளை அழித்தது யார்? இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா?

சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவிக்களில் பதிவான காட்சிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது மாஜிஸ்திரேட் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்? என்பதிலிருந்து தொடங்குகிறது சிபிசிஐடி விசாரணையின் புதிய கோணம்..


காட்சிகள் தினசரி அழியும் வகையில் செட்டிங்கை மாற்றியது யார்? என்பது குறித்து சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். காவல்நிலையத்தின் சிசிடிவி யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? என்பதுதான் முக்கியமான கேள்வி.. ஆனால், இதுவரையிலும் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.

சாத்தான்குளம் துணை சரகத்தில் தொழில்நுட்ப பிரிவு பதவிகள் கடந்த 6 மாதங்களாக நிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டிஜிபி அலுவலக உத்தரவின்படி குறைந்தபட்சம் 15 நாட்களின் CCTV காட்சிகளை அழிக்கக்கூடாது என்பது விதி. ஆனால், சாத்தான்குளத்தில் நடந்தது தலைகீழ்.

கடந்த பிப்ரவரி மாதம் சிசிடிவியின் பதிவு முறையில் மாற்றம் கொண்டுவந்தது யார்? இந்த கேள்விக்கான தேடலில் சிக்கப்போவது யார்?சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றும் நபர். ஆனால், அந்த காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்கிறார் தாமஸ். சாத்தான்குளம் காவல்நிலையத்தின் காவலர்கள் தான் ஒரே நாளில் காட்சிகள் அழிவது போன்று மாற்றியுள்ளனர் என்ற குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

பல கோணங்களில் விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் அழிக்கப்பட்ட கட்சிகளை மீட்டு வருகிறார்கள். இன்னோர் பக்கம், தந்தை மகன் சித்திரவதை மரண வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொடர்பு என்ற புகார் எழுந்தது.

சாத்தான்குளம் துணை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-இல் யாரும் பணியாற்றவில்லை என்பது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனா, கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் பணியில் காவலர்களுடன் சேர்ந்து 5 தன்னார்வ இளைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

சம்பவம் நடத்தபோது, அந்த 5 இளைஞர்கள் அங்கிருந்தார்களா? அவர்களின் பங்கு என்ன? என சிபிசிஐடி போலீசார் அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறனர். இந்த கொடூரமான சம்பவத்தில் தன்னார்வ இளைஞர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது விசாரணை முடிவில் தெரியும் என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.

அதேபோல், தன்னார்வ அமைப்பின் இளைஞர்கள் பேசியதாக கசிந்த வாட்ஸ் அப் ஆடியோ குறித்தும் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்தும், சாத்தான்குளம் போலீஸ் சித்திரவதை சம்பவம் குறித்தும் சமூகவளைதங்களில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என சிபிசிஐடி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க...

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முயன்று வருகிறது. போலீசாரிடம் நடத்தப்படும் விசாரணையில் உண்மை முழுமையாக வெளிவருமா? அனைத்து குற்றவாளிகளும் சிக்குவார்களா?
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading