தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் - ஆறு வாரத்தில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உயிரிழந்த தந்தை மகன்

 • Share this:
  சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆறு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு சிறையில் உயிரிழந்தவிவகாரம் தேசிய அளவில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தவிவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக இன்று சி.பி.சி.பி.டி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தந்தை, மகன் தாக்கப்பட்ட சாத்தான்குளம், அவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து, ஜெயராஜின் மகள், மனைவியிடமும் சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

  இந்தநிலையில், தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆறு வார காலத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜிக்கு தேசிய மனித உரிமைக்ள ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
  Published by:Karthick S
  First published: