எஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்: செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருட்டு

செங்குன்றத்திலுள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடலுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்: செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருட்டு
எஸ்.பி.பி இறுதிச் சடங்கு
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 1:32 PM IST
  • Share this:
சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது கோடம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

பின்னர், இந்து முறைப்படி எஸ்.பி.பி.சரண் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அப்போது ஏராளமான கூட்டம் கூட்டியிருந்தது.
அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் செல்போன் உள்பட 5 பேரின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களின் செல்போன் உள்ளிட்ட இறுதி அஞ்சலியில் பங்கேற்க வந்தவர்களிடம் கைவரிசையை காட்டியதாக‌ சந்தேகத்தின்பேரில் 12 பேரை‌ பிடித்து வெங்கல் காவல்நிலையத்தில் வைத்து காவல்துறை‌ விசாரணை நடத்திவருகின்றனர்.

குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார் .
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading