ஞானம் உள்ள ஆ.ராசா பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்? ஆர்.பி உதயகுமார் பதில்

இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஞானம் உள்ள ஆ.ராசா பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார்? ஆர்.பி உதயகுமார் பதில்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஆ.ராசா
  • Share this:
பாரத் நெட் திட்டத்தில் ஊழல் ஏதுமில்லை, நன்றாக படித்த ஆ. ராசா, ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி வாந்தி எடுக்கிறார் என மக்கள் கேட்கிறார்கள் என ஆ.ராசாவின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முககவசம் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரு.வி.க நகரில் 5530 பேரில் 3000 பேர் பரிபூரணமாக குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். முழு ஊரடங்கில் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை போலவே தளர்வுகளுடன் கூடிய முடக்கத்திலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.


முறையான ஆதாரத்துடன் இ- பாஸ் விண்ணப்பித்தால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது; இதில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திமுக ஆட்சி அமைந்த உடன் ஆர்.பி.உதயகுமார் போன்ற தகுதியற்றவர்களின் தகுதிகள் தக்க நேரத்தில் நிர்ணயிக்கப்படும்; அதுவரையாவது இவர்கள் அமைதி காக்க வேண்டும் என ஆ.ராசா விடுத்துள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வர் சாத்தான் குளத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்; முதல்வர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையில் இருந்த ராஜா சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை குறித்து பேசுகிறார்.பாரத் நெட் திட்டத்தில் ஊழல் ஏதுமில்லை; நன்றாக படித்த அ.ராசா, ஞானம் உள்ள அ.ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார் என மக்கள் கேட்கிறார்கள்.

தமிழகத்தில் இணையதள சேவை என்பது தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Also read... நாகையில் விளையாடச் சென்ற 19 வயது இளைஞர் சடலமாக கண்டெடுப்பு

அதிமுகவை மக்கள் எப்படி தீர்மானிப்பார்கள் என்பதை அ.ராசா போன்றவர்கள் தீர்மானிக்க முடியாது. ஜெயலலிதா இந்த பூமியை விட்டு சென்ற பிறகு இந்த அரசு ஒரு நிமிடம் கூட நிலைத்திருக்க கூடாது என ராசாவும் ஸ்டாலினும் நினைத்தனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading