மதுரையில் சாலையில் தவறவிட்ட ரூ 40,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு குவியும் பாராட்டு!

சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரையில் சாலையில் தவறவிட்ட ரூ 40,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு குவியும் பாராட்டு!
சாலையில் தவறவிட்ட ரூ 40,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்
  • Share this:
மதுரையில் சாலையில் தவறவிட்ட 40,000 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார். இவர் அந்த பகுதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார், இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக தனது பையில் வைத்திருந்த 40,000 ரூபாய் பணத்தை தவிர விட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ்வரன் என்பவர் அந்த பணத்தை எடுத்து உரியவரிடம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஒப்படைத்தார்.

சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

First published: May 22, 2020, 8:56 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading