அங்கொட லொக்கா கொலையில் திடீர் திருப்பம் - மூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றத்தை மாற்றியது கண்டுபிடிப்பு

அங்கொடா லொக்காவிற்கு போலி ஆதார் எடுத்த விவகாரம் மற்றும் பல உண்மைகளையும் ஆவணங்களையும் சிபிசிஐடி கைப்பற்றியுள்ளனர்.

அங்கொட லொக்கா கொலையில் திடீர் திருப்பம் - மூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றத்தை மாற்றியது கண்டுபிடிப்பு
அங்கொட லொக்கா
  • Share this:
இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்காவிற்கு போலி ஆதார் எடுக்க பயன்படுத்திய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அங்கொடா லொக்காவின் உடலை போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி மதுரையில் தகனம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அங்கொடா லொக்கா துபாய் தப்பி செல்வதற்கும், ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரிக்க மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும், போலி ஆவணங்களாக இருந்தாலும் உண்மையான முகவரியை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது..

 

மேலும் படிக்க...நெல்லை & தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்ஆதாரில் இந்திய கொடி விரலால் பூசப்பட்டது போல இருக்கும் இடத்தில், போலி ஆதாரில் சக்கரத்துடன் கூடிய தேசிய கொடி உள்ளது. மேலும், சிவகாம சுந்தரி பயன்படுத்தி வந்த காரின் எண் இருசக்கர வாகனத்தின் எண் என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே சிவகாம சுந்தரியின் முன்னாள் கணவரான வினோத்குமார் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இதற்கிடையே, சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கோவை தனியார் மருத்துவமனையில் அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பாலாஜி நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றி தனது தோற்றத்தை மாற்றியுள்ளதும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading