பெரிய வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

பெரிய வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரிய வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை
கோப்புப் படம்
  • Share this:
ஊரடங்கால் கடந்த நான்கு மாதங்களாக வருமானம் இன்றி வீட்டில் மக்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் திருக்கோவில்களைத் திறந்து சாமி தரிசனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் நான்கு மாதங்களாக திருக்கோவில்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வேலையின்றி, வருமானங்கள் இல்லாமல் வீட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு கட்டுபாடுகளுடன் தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.



அரசு மதுபானக் கடைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருக்கோவில்களிலும் தடுப்புகள் அமைத்து பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரியுள்ளனர்.


10,000 ரூபாய் வருமானம் உள்ள கோவில்கள் மட்டும் தற்போது திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்துக் கோவில்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading