வடமாநில தொழிலாளர்களை அழைத்து வரவேண்டும்.. அரசுக்கு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை

சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள வடமாநில தொழிலாளர்களை மீண்டும் தமிழகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

வடமாநில தொழிலாளர்களை அழைத்து வரவேண்டும்.. அரசுக்கு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கோரிக்கை
பின்னலாடை தயாரிக்கும் தொழிலாளர்கள் (கோப்புப்படம்)
  • Share this:
75 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கலாம் என அரசு அனுமதி அளித்தும் திருப்பூரில் தொழிலாளர்கள் மற்றும் ஆர்டர் பற்றாக்குறையால் 50 சதவிகித பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அடுத்த மாதம் முழுவீச்சில் பணிகள் துவங்கும் என்பதால் தொழிலாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 50 சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகளை இயக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பீதியின் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்குத் திரும்பிச் சென்றனர்.


தற்பொழுது 75 சதவிகித பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கலாம் என அரசு தலைவர்களை அறிவித்துள்ள போதும் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 40 சதவீதத்தினர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தற்பொழுது சொந்த ஊருக்குச் சென்றுள்ள நிலையில் 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.Also read: கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலம்

ஊரடங்கு காலத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் திறக்கப்படாததால் மக்களின் நுகர்வு குறைந்ததாலும் தேவை பெருமளவு குறைந்து விட்டதாகவும் இதனால் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும், ஏற்றுமதி நிறுவனங்களிலும் தற்பொழுது மாதிரி ஆடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதால் பணி சீராகச் சென்று கொண்டுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் முழு மறைவு பணிகள் துவங்கும் காலகட்டம் என்பதால் அதற்குள்ளாக வட மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வருவதற்கு அரசு வழிவகை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading